ரிஷாத் பதியுதீனுக்கு மேலுமொரு சிக்கல் - மோசடி செயல்!

ரிஷாத் பதியுதீனுக்கு மேலுமொரு சிக்கல் - மோசடி செயல்!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த போது, வெலிக்கடை மகளிர் சிறைச்சாலைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 11:55 மணியளவில் ரிஷாத் பதியுதீனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அழைப்பை எடுத்த எம்.பி ரிஷாத் பதியுதீன், வெலிக்கடை மகளிர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மனைவியுடன் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த அழைப்பை எடுத்த வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை அதிகாரி இவரது கோரிக்கையை மறுத்துள்ளார்.

அது சிறைச் சட்டத்திற்கு முரணான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து வந்த தொலைபேசி எண் நாடாளுமன்றத்திற்கு சொந்தமானது என்று சிறைத்துறை சந்தேகிக்கிறது. மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு மெசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனிடம் இருந்து அண்மையில் கைத்தொலைபேசி ஒன்று சிறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இவருக்கு கைத்தொலைபேசி கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் சிறை அதிகாரி விசாரணையில் உள்ளதுடன், அவர் உடனடியாக வவுனியா சிறைக்கு மாற்ற சிறைத்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.