அமெரிக்காவினால் நன்கொடை - காரணம் இது தான்!

அமெரிக்காவினால் நன்கொடை - காரணம் இது தான்!

17ஆம் நூற்றாண்டு புராதன கண்டிய மன்னர் அரண்மனை மற்றும் தொல் பொருள் அருங்காட்சியகம் போன்றவற்றை அபிவிருத்தி செய்து பாதுகாக்க அமெரிக்கா 520 இலட்ச ரூபாவை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இது பற்றி அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது,

கண்டி நகரில் சமய கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் பொருந்திய வரலாற்றிடங்களை பாதுகாப்பதன் மூலம் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத் துறையை அபிவிருத்தி செய்து அவற்றை பாதுகாப்பதை ஊக்குவிக்கும் முகமாக அமெரிக்கா உதவ முன்வந்துள்ளது.

இதற்காக 17ஆம் நூற்றாண்டு முதல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் அமையப்பெற்ற புராதன கண்டிய மன்னர் அரண்மனை மற்றும் தொல் பொருள் அருங்காட்சியகம் போன்றவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கலாச்சார பாதுகாப்பிற்கான அமெரிக்க தூதுவரின் நிதியம்’ ஊடாக உதவித்தொகை ஒன்றை வழங்கியுள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா அரசு வழங்கியுள்ள இந்நிதி இலங்கைப் பெறுமதியில் 520 இலட்ச ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.