மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!


தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

தென்ஆப்பிரிக்கா அணி 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (07) நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்டது.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, 204 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. 

தென்ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட் இழப்புக்கு 125  ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-1 எனும் வித்தியாசத்தில் தொடரை தன் வசமாக்கியது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.