கொரோனா தொழில்நுட்பக் குழுவில் இருந்து பல மருத்துவ நிபுணர்கள் இராஜினாமா!

கொரோனா தொழில்நுட்பக் குழுவில் இருந்து பல மருத்துவ நிபுணர்கள் இராஜினாமா!

கொரோனா தொழில்நுட்பக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் மற்றொரு மருத்துவ நிபுணர்களின் குழு வரும் நாட்களில் இராஜினாமா செய்வதாக அரசு மருத்துவ அதிகாரிகள் மன்றம் தெரிவிக்கின்றது.

மருத்துவ நிபுணர்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் காரணமாக பல நிபுணத்துவ மருத்துவர்கள் தங்கள் தொழில் கௌரவத்தை பாதுகாப்பதற்காக குழுவில் இருந்து விலகி இருப்பதாக ஏற்கனவே தகவல் கிடைத்ததாக சங்கத்தின் தலைவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்தார்.

மருத்துவ ஆலோசனையின் படி பயணக் கட்டுப்பாடுகள் சரியாக அமல்படுத்தப்பட்டிருந்தால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு குறைவடைந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிபுணர் ஆலோசனையின் போதும் அரசியல் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதால் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரக்தியடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.