மீண்டும் விலை உயரும் சமையல் எரிவாயு?

மீண்டும் விலை உயரும் சமையல் எரிவாயு?

லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க கூடாது என என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களின் கோரிக்கைக்கு மாத்திரம் கவனம் செலுத்தாமல் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தரப்பில் இருந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்திற்கு 8 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 291 ரூபாவிலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 114 ரூபாவிலும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு லாப் நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டால் 12.5 கிலோகிராம் நிறைவுடைய லாப் ரக சமையல் எரிவாயுவின் புதிய விலை 2147 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 858 ரூபாவாகவும் உயர்வடையும்.

கடந்த மாதம் 12.5 நிறையுடைய லாப் ரக சமையல் எரிவாயுவின் விலை 363 ரூபாவிலும், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.

சமையல் எரிவாயு சிலிண்டர் இறக்குமதிக்கு அதிக செலவாகுகிறது. அதனால் தாம் நஷ்டமடைவதாக லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

லாப் சமையல் எரிவாயுவின் தற்போதைய விலை அதிகரிப்பினால் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளார்கள்.ஆகவே மக்களின் தரப்பில் இருந்தும் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.