எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பாடசாலைகள் ஆரம்பம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பாடசாலைகள் ஆரம்பம்!


நாடு முழுவதும் 13 ஆம் திகதிக்குள் பாடசாலைகள் திறப்பதற்கான தொடர் வழிகாட்டுதல்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அமைச்சிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிறப்பு மருத்துவர்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டு முகவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் உதவியுடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன வழிகாட்டுதல்களை தயாரித்து ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளார்.

பாடசாலைகளை திறப்பதற்கான திட்டத்தை கல்வி அமைச்சகம் ஏற்கனவே தயார் செய்துள்ளது.

பாடசாலைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்பு மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை (10 ஆம் திகதி) ஜனாதிபதி தலைமையில் நடந்த கோவிட் பணிக்குழு கூட்டத்தில் பாடசாலைகள் திறப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கிராமப்புற பாடசாலைகள் மற்றும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்பப் பாடசாலைகள் திறக்க முடியும் என்று அமைச்சர்கள் பந்துல குணவர்தன மற்றும் டல்லஸ் அழகப்பெரும ஆகியோர் சுட்டிக்காட்டினர். இதற்காக மாகாண ஆளுநர்களின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஜூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆரம் பாடசாலை கல்வியில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 12-18 வயதுடைய மாணவர்களுக்க்ய் தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த எண்ணிக்கை சுமார் இரண்டு மில்லியன் என்று தெரியவந்துள்ளது.

க.பொ.த சாதாரண தர முடிவுகளை வெளியிடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சாதாராண தர பரீட்சை, நடைமுறை பரீட்சை நடைபேறாத காரணத்தினால் முடிவுகள் வெளியிடுவது தாமதமாகும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவிக்கின்றது. முடிவுகளை விரைவாக அல்லது நடைமுறை சோதனைகள் இல்லாமல் வெளியிடுவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த சந்திப்பில் நாடளாவிய ரீதியில் அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டும் என அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும ஆலோசனை வழங்கியுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.