எரிபொருள் இறக்குமதிக்கு பணம் இல்லை - செய்யப்போவது இது தான்!

எரிபொருள் இறக்குமதிக்கு பணம் இல்லை - செய்யப்போவது இது தான்!

கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) சர்வதேச சந்தையில் இருந்து 2500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற முடிவு செய்துள்ளது.

எரிசக்தி அமைச்சகத்தின் வட்டாரங்களின் அடிப்படையில், அமெரிக்காவில் உள்ள 'கான்செப்ட் குளோபல்' என்ற நிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெறப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவை ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

கடனுக்கு 2 வருட சலுகைக் காலமும், திருப்பிச் செலுத்தும் காலம் 12 ஆண்டுகள் ஆகும், ஆண்டு வட்டி விகிதம் 3% என தெரிவிக்கப்படுகின்றதுழ்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியால், இரண்டு அரச வங்கிகளாலும் சுமார் 3.3 பில்லியன் டொலர் அளவுக்கான நிலுவையில் உள்ள கடன் கடிதங்களைக் கூடத் தீர்க்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.