
இந்த வருடத்தின் முதல் எட்டு மாதக் காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதியானது 22.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதிலிருந்து 7.88 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், தொடர்ந்தும் மூன்றாவது மாதமாக ஆகஸ்டிலும் ஏற்றுமதி வருமானமானது ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.