இலங்கை அரசின் இராணுவ ஆட்சியை நோக்கிய பயணம்!

இலங்கை அரசின் இராணுவ ஆட்சியை நோக்கிய பயணம்!

நிர்வாகத்துறையில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்குமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அவருடைய இல்லத்தில் நேற்று நடந்த ஊடக சந்திப்பிலே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்

தற்போது அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி பதவி சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிற்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்துவது நல்லது தான். ஆனால், எல்லாத்துறையிலும் குறிப்பாக நிர்வாகத்துறையில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும்.

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களையும் மருத்துவ நிபுணர்களையும் சேர்ந்து ஒரு தேசிய அமைப்பை உருவாக்கி திட்டங்களை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டது.

கொரோனா தொற்றின் திரிபுகள் தீவிரமடைந்து வருவதால் மக்கள் அவதானத்துடன் சுகாதார நடைமுறை பின்பற்றி செயற்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் போல விலைவாசியும் எகிறியுள்ளது. உழைப்பின்மை, வறுமை, பசி, பட்டினி காரணமாக மக்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கான திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள நீண்டவரிசையில் நிற்பதுடன் அலைந்து திரிகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்றார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.