நாட்டை மீண்டும் திறப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர்!

நாட்டை மீண்டும் திறப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர்!

நாடு திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்று நிதி மற்றும் மூலதன சந்தை நிறுவன சீர்திருத்தங்களின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றிற்கு அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“இந்த நாடு திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. நாடு திறக்கப்படாவிட்டால், நாடு பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். நாட்டில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்கின்றனர்.

அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டுமென்றால், நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”

நாடு மூடப்பட்டதன் காரணமாக ஒரு நாளைக்கு சுமார் 15 பில்லியன் ரூபாய்களை நாடு இழக்க நேரிடும் என்று கூறிய அவர், நாடு பத்து நாட்களுக்கு மூடப்பட்டாலும் 150 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.