ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் விசேட உரை இடைநடுவில் துண்டிக்கப்பட்டமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின் போது, கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் உரை, இணையவழியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், ஒளிபரப்பு இடைநடுவில் துண்டிக்கப்பட்டது.
ஒளிபரப்பு இடைநடுவில் நிறுத்தப்பட்டமையானது, சூழ்ச்சியா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து ஆராயுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரியுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு, கடந்த 2ம் திகதி மைத்திரிபால சிறிசேன, தனது வீட்டிலிருந்தவாறு, சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக, சமூக வலைத்தளங்களில் விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவின் உரை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பெரும்பாலான தமது கட்சி உறுப்பினர்களுக்கு கூட பார்வையிட முடியவில்லை என கூறப்படுகின்றது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான இடையூறுகள் ஏற்படாதவாறு விசாரணைகளை நடத்தி, முடிவொன்றை எடுக்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.