நான்கு வருட சிறைத் தண்டனை அனுபவிக்க்கும் ரஞ்சன் தொடர்பில் இன்று வெளியான செய்தி!

நான்கு வருட சிறைத் தண்டனை அனுபவிக்க்கும் ரஞ்சன் தொடர்பில் இன்று வெளியான செய்தி!

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய கோரி செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கொரோனா சூழ்நிலையால் சிறைச்சாலைக்கு செல்வது தடைசெய்யப்பட்ட இத்தருணத்தில் சிறைக்கைதியான ரஞ்சம் பற்றி விசாரிக்கும் பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர் வேதாரச்சியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.