நேற்று (13) ஒரு தனியார் தொலைகாட்சியில் ஜம்இய்யா Zoom ஊடாக நடாத்திய ஒரு கூட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் விளக்கம்!

நேற்று (13) ஒரு தனியார் தொலைகாட்சியில் ஜம்இய்யா Zoom ஊடாக நடாத்திய ஒரு கூட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் விளக்கம்!

மேற்குறிப்பிட்ட கூட்டம் கடந்த 2021.07.07 ஆம் திகதி இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகளுடன் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா Zoom ஊடாக நடாத்திய கூட்டமாகும். இதில் 24 முஸ்லிம் சிவில் அமைப்புகள் அழைக்கப்பட்டதோடு, 50 க்கும் அதிகமான நபர்கள்; கலந்து கொண்டனர்.

இந்நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படையில் ஜனநாயக விழுமியங்களைப் பேணி நாம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கலந்துரையாடுவது எமது ஜனநாயக ரீதியான உரிமையாகும். எனினும் ஏதோ ஒரு வகையில் இதன் ஒலிப்பதிவு சிலருக்கு சென்றடைந்துள்ளது. இந்த செயலை செய்தவர் அமானிதத்திற்கு மோசடி செய்து, பண்பாட்டு ரீதியான ஒரு தவறை செய்திருக்கின்றார். அவரை அல்லாஹ்விடத்தில் பொறுப்புச் சாட்டுகின்றோம்.

எனவே நாம் முகம் கொடுக்கக்கூடிய சவால்களை சரியான முறையில் எதிர்கொண்டு, எல்லோரும் ஒன்றுபட்டு, நல்லெண்ணத்துடன், இஸ்;லாம் கற்றுத்தரும் தகவல் பரிமாற்றம் தொடர்பான அனைத்து பண்பாடுகளையும் பேணி செயற்படுவோமாக.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் நேர்வழிப்படுத்துவானாக.

வஸ்ஸலாம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.