பௌத்த கொடியின் நிறத்தில் வர்ணம் தீட்டியதால் சர்ச்சை!

பௌத்த கொடியின் நிறத்தில் வர்ணம் தீட்டியதால் சர்ச்சை!

யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான குளத்தைச் சுற்றி பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்கள் ஒத்த வகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், உடனடியாக அந்த வேலைத் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.

இதன்போது, குறித்த நிறங்கள் ஒலிம்பிக் கொடியினை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், எனவே இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும் போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டு இருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற குளத்தில் சுற்று கம்பங்களுக்கு இவ்வாறு வர்ண நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.