21 ஆம் திகதிக்கு பிறகு நாடு திறக்கப்படுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

21 ஆம் திகதிக்கு பிறகு நாடு திறக்கப்படுமா?


எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிடடுள்ளது.

இது உத்தியோகபற்றற்ற தகவல் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா செல்லும்முன் நாடு திறக்கப்படுகின்ற தீர்மானம் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நிறைவுக்கு வரும் என்றும், அதன் பின்னர் நாட்டின் வழமையான செயற்பாடுகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை அறிக்கையாக முன்வைக்கும் படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்திருக்கின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 21ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.