மாத்தளையில் 10 மணி நேர நீர் வெட்டு!

மாத்தளையில் 10 மணி நேர நீர் வெட்டு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (29) காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மாத்தலையின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் 10 மணிநேரம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் கந்தேகெதர தொட்டி மற்றும் உடுகம நீர் தொட்டியை பிரதான நீர்வழிப்பாதையுடன் இணைப்பதால் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில், உடுகம, பாலபத்வால, தொஸ்தரவத்த, துங்கலவத்த, சாப்புவத்த, சமந்தாவ, கிரிகல்பொத்த, நிகவல பி மற்றும் சி, மாத்தளை மாநகர சபை எல்லை, ஏ -9 வீதி, தென்ன, உடுப்பிஹில்ல, அலுவிஹாராய, களுதேவால, கும்புவேங்கர, கும்பியங்கொட, ரத்தொட்ட வீதி, அகலவத்தை, பாராவத்த, கிவுல மற்றும் விஹார வீதி ஆகிய இடங்களில் நீர் விநியோகம் நிறுத்தப்படும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.