நாரஹேன்பிட்ட மோட்டார் வாகன போக்குவர்த்து ஆணைக்குழு அலுவலகம் மற்றும் வெஹரஹெர அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்ட பிரதான அலுவலகத்தில் பிரதி ஆணையாளர்கள் மூவர் உட்பட 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெஹரஹெர அலுவலகத்திலும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.