கொரோனா தீவிரம்! விமான நிலையம் மூடப்படுமா? வெளியான அறிவிப்பு!

கொரோனா தீவிரம்! விமான நிலையம் மூடப்படுமா? வெளியான அறிவிப்பு!


நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் விமான நிலையத்தை மூடுவது தொடர்பிலும் பேச்சு நிலவி வருகிறது.

எனினும், அவ்வாறு எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை எனவும், வழமை போன்று விமான நிலையம் இயங்கும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இன்னும் பல நாடுகளில் 'சிவப்பு' பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை இந்நாடுகளில், இலங்கையிலிருந்து பயணிப்போர் பாரிய பொருட் செலவில் 10 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தமும் தொடர்கிறது. ஆயினும், கடந்த வாரம் 300 பேர் வரை நாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.