நாடு கடுமையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் முடக்கப்படுமா? இறுதி முடிவு இன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடு கடுமையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் முடக்கப்படுமா? இறுதி முடிவு இன்று!

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் இன்று முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், தினசரி இறப்புகள் உச்சத்தை எட்டியுள்ளதால், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்தோடு, வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய முடக்கத்தை அமுல்படுத்துமாறு தொடர்ச்சியாக கோரப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாடு தழுவிய முடக்கத்தை அமுல்படுத்துவத குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்பதால், முடக்கத்தை அமுல்படுத்தாமல் இருக்க அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை அரசாங்கம் தொடரும் என்றும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேலும் சில நடைமுறைகள் அமுல்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிது.






Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.