
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பின்னர் செப்டம்பர் முதல் வாரத்தில் முறையாக பாடசாலைகளை திறக்க முன்னர் திட்டமிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில் அதைச் செய்ய முடியாது என்றும், ஆசிரியர் சங்கங்களால் தற்போது செயல்படுத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கையும் அதை பாதித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)