இந்தியாவை விடவும் இலங்கையில் கொரொனா இறப்பு வீதம் பல மடங்கு அதிகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவை விடவும் இலங்கையில் கொரொனா இறப்பு வீதம் பல மடங்கு அதிகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் பதிவான கொரோனா தொற்று காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவை விட 10 மடங்கு அதிகம் என ரஜரட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுனத் அங்கம்பொடி தெரிவித்துள்ளார்.

உலக புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் உச்சத்தை விட அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பதிவினை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.