
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாடு கொரோனா 4 ஆம் இடர் நிலையில் இருப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
நாட்டின் தடுப்பூசி செயல்முறை, அறிவியல் முறையின் எல்லைக்கு வெளியே செயற்படுத்தப்பட்டமையே, மரண எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு காரணம் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.