ரஷ்யா மற்றும் இலங்கைக்கிடையே ஒருங்கிணைந்த சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்!

ரஷ்யா மற்றும் இலங்கைக்கிடையே ஒருங்கிணைந்த சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்!

ரஷ்யா மற்றும் இலங்கைக்கிடையே ஒருங்கிணைந்த சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் அண்மையில் அந்நாட்டின் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த பிரதானிகளைச் சந்தித்து உரையாடினார்.

ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் விசேட ஊக்குவிப்புத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிட்டதுடன், குறித்த வேலைத்திட்டத்திற்காக முழுமையான ஆதரவினை வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாக ரஷ்யா சுற்றுலா முகவர் நிலையத்தின் பிரதானி Elena V Lysenkova மற்றும் அவரது குழுவினர் தெரிவித்திருந்தனர்.

- சுற்றுலாத்துறை அமைச்சு


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.