ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை பதக்கங்களே வெல்லாத நாடுகளை பற்றிய தகவல் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை பதக்கங்களே வெல்லாத நாடுகளை பற்றிய தகவல் வெளியாகின!

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை பதக்கங்களே வெல்லாத நாடுகளை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான தலைநகர் டோக்கியோவில், இந்த கொரோனா பரவலுக்கு மத்தியில், ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒலிம்பிக் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒலிம்பிக் 2020 இன் கடை தினம் இன்றாகும். 

இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இதுவரை பதக்கங்களே வெல்லாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Bangladesh

கடந்த சில தசாப்தங்களாக, பதக்கம் வெல்வதற்காக வங்கதேசமும் போராடி தான் வருகிறது. ஆனால் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை, ஆரம்ப காலக்கட்டத்தில் இங்கு கிரிக்கெட்டிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது தான் மற்ற விளையாட்டுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

Antigua and Barbuda

குறைந்த மக்கள் கொண்ட இந்த தீவுகளில் இருந்து கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால், இந்த நாடும் இதுவரை ஒரு பதக்கத்தை வீட்டிற்கு கொண்டுவரவில்லை.

Albania

இந்த நாட்டில் இருந்து மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல் மற்றும் பளுதூக்குதல் ஏராளமான வீரர்கல் உள்ளனர். இருப்பினும் இந்த நாடும் இதுவரை ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை.

Bhutan

பூட்டான் கடந்த 1984 மற்றும் 1992-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், அதிகபட்சமான தடகள வீரர்களை களமிறக்கியது. ஆனால் அதற்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

Myanmar

முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்ட, மியான்மரில் இருந்து வழக்கமாக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வருகின்றனர், இருப்பினும் கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் உள்ள அரசியல் குழப்பம் மற்றும் நாட்டில் வசதிகள் இல்லாததால், தேசத்திலிருந்து வரும் வல்லமைமிக்க விளையாட்டு வீரர்களின் கடுமையான பற்றாக்குறை உள்ளது.

Congo

காங்கோ வங்கதேசத்திற்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஆகும்.

Rwanda

இந்த நாடு முதன் முதலில் 1984-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றது.

அதைத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 7 அணிகள் நீச்சல், குறுக்கு நாடு, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் டிராக் நிகழ்வுகளில் பங்கேற்றது. இருப்பினும் எந்த ஒரு பலனும் இல்லை. அதே சமயம், கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால விளையாட்டுகளில் பாராலிம்பிக் போட்டிகளில் முதல் சர்வதேச பதக்கத்தை வென்றது.

Bosnia and Herzegovina

அரசியல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இதுவும் ஒன்று. இங்கிருந்து விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் முதன்முறையாக 1992-ஆம் ஆண்டு பங்கேற்றனர்.


2016 ரியோ ஒலிம்பிக்கில் அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்கள் இந்த நாடுகளின் சார்பில் பங்கேற்றனர். ஆனால் ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லாத குறைந்தது 50 முதல் 60 நாடுகள் உள்ளன.

இதில் பெலிஸ், சாட், தெற்கு சூடான், துர்க்மெனிஸ்தான், சியரா லியோன் மற்றும் சோமாலியா போன்ற பல நாடுகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 டோக்யோ ஒலிம்பிக் பதக்க பட்டியல் 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.