நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைப் புலி!

நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைப் புலி!

லக்ஸபான நீர்த்தேக்கத்திலிருந்து உயிர் பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைப் புலியொன்றின் சடலத்தை ரந்தனிகலை மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

எட்டு வயது மதிக்கக்கூடிய 6 அடி நீளமும் 3 அடி உயரமுடைய ஆண் சிறுத்தை புலியே இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் சிறுத்தைப்புலி நீராடுவதற்கு வந்திருந்த போது தவறி நீர்த்தேக்கத்தில் விழுந்திருக்கலாம் என நல்லத்தண்ணி வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெனியன் நீர்த்தேக்கத்தில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலியின் உடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட இரந்தனிகல நீர்த்தேக்க பொறியியலாளர் நல்லத்தண்ணி வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து நேற்று முன்தினம் மாலை (06) நல்லத்தண்ணி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் சிறுத்தைப்புலி மீட்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலைக்குச் கொண்டு சென்றபோது, இரந்தனிகல மிருக வைத்தியசாலைக்கு சிறுத்தைப்புலியின் உடலத்தை பரிசோதனைக்கு கொண்டு செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.