சீனி மற்றும் பருப்பு விலை அதிகரிப்பு!

சீனி மற்றும் பருப்பு விலை அதிகரிப்பு!

உள்ளூர் சந்தையில் சிவப்பு பருப்பு மற்றும் சீனி ஆகியவையின் கிலோ ஒன்றிற்கான விலை ஒரு வாரத்தில் ரூ.10 ஆல் அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை ரூ.155 ஆக இருந்தது மேலும் 07 ஆம் திகதி மேலும் ரூ.10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் மொத்த விலை ரூ. 170 ஆக காணப்படுவதோடு, சில்லறை விற்பனையாளர்கள் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை ரூ. 220 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் ஒரு கிலோ சீனியின் விலை ரூ.125 ஆகவும், ஒரு கிலோ சீனியின் மொத்த விலை ரூ. 142 ஆக அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் சூழ்நிலை காரணமாக ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை ரூ.155 ஆக விற்பனை செய்ய வேடியதாய் உள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.