கொரோனா வைரஸ் டெல்டா திரிபை மறந்து இரு கோவில்களில் வருடாந்த பூஜை!

கொரோனா வைரஸ் டெல்டா திரிபை மறந்து இரு கோவில்களில் வருடாந்த பூஜை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள இரண்டு இந்து கோவில்களின் நிர்வாக சபை குழுக்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக இன்று (08) முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுற்றப்பட்சதால பருத்தித்துறை சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

பருத்தித்துறையில் உள்ள சூப்பர்மடம் பகுதியில் உள்ள முனியப்பர் மற்றும் சிவன் இந்து கோவில்களில் வருடாந்திர தேவ பூஜைகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டதாக சுகாதார அதிகாரி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள் கோவில்களுக்கு 14 நாட்கள் சீல் வைத்துள்ளதோடு மற்றும் கோவில் நிர்வாக ஆபை குழுக்களையும் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

பருத்தித்துறைப் பகுதியில் கொரோனா அதிக ஆபத்துள்ளதோடு, 2,000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.