இலங்கையில் நாள் ஒன்றுக்கு 7 மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை காணும் மக்கள் வாழும் அபூர்வ கிராமம் ஒன்று கண்டுபிடிப்பு!

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 7 மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை காணும் மக்கள் வாழும் அபூர்வ கிராமம் ஒன்று கண்டுபிடிப்பு!

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 7 மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை காணும் மக்கள் வாழும் கிராமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லுணுகம பிரதேச செயலகத்தின் மடொல்சீம கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கொஹொனாவெல என்ற கிராமத்தில் யஹன்கல, கல்உல்ல, ஹய்ன்தம்மாகல மற்றும் வியன்கல ஆகிய மலைத்தொடர்களுக்கு நடுவில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமம் 1815 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியின் போது மறைந்துக் கொள்வதாக ஒரு சிலரால் உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த கிராமத்தில் சுமார் 55 குடும்பங்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் நாள் ஒன்றுக்கு 7 மணித்தியாலங்கள் மாத்திரமே சூரிய வெளிச்சத்தை காண முடிவதாக தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த கிராமத்தில் வாழும் மக்கள் மிகவும் நெருக்கடியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு பாதைகள் கூட இல்லை என குறிப்பிடப்படுகின்றது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.