மூன்று வயது குழந்தையின் உயிரைப்பறித்த மின்விசிறி - காத்தான்குடியில் சம்பவம்!

மூன்று வயது குழந்தையின் உயிரைப்பறித்த மின்விசிறி - காத்தான்குடியில் சம்பவம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பகுதியின் வீடொன்றிலிருந்து 3 வயது ஆண் குழந்தையின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.

காங்கேயனோடை பத்ரு. பள்ளிவாயல் வீதியில் உயிரிழந்த குழந்தையின், வீட்டிலிருந்தே குறித்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

முஹம்மத் ரிழ்வான் எனும் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குழந்தையின் தாய், குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது குழந்தை படுத்து கிடந்ததாகவும், குழந்தையின் மீது வீட்டிலுள்ள மேசை மின்விசிறி ஒன்று விழுந்து கிடப்பதையும் அவதானித்துள்ளார்.

மேலும், குழந்தையை எழுப்பிய போது, குழந்தை எழும்பாத நிலையில், அயலவர்களின் உதவியுடன் குழந்தையை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்திசாலையில் தெரிவித்ததாக தெரியவருகின்றது.

குறித்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.