
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, கொரோனா வைரஸால் இறந்த பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்படசில்லை என்று அவர் கூறினார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கும் வகையில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கி சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)