
இதன் விளைவாக, ஜூலை மாதத்திலிருந்து பொருட்களுக்கான ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், அத்தியாவசிய உணவு மற்றும் பொருட்கள் இறக்குமதியாளர்கள் வர்த்தக சங்கம், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதி, நாட்டில் மேலும் உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
ஜூலை மாதம் ஆர்டர் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 1,000 கொள்கலன்கள் (கண்டய்னர்) அத்தியாவசிய உணவு பொருட்கள் துறைமுகத்தில் சிக்கி இருப்பதாக தொழிற்சங்கம் கூறுகிறது.
உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி, மிளகாய் மற்றும் பூண்டு போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய ஒரு மாதத்திற்கு சுமார் $ 80 மில்லியன் செலவாகும். (யாழ் நியூஸ்)