நாட்டை இரு வாரங்களுக்கு முடக்க அறிவுறுத்தல்!

நாட்டை இரு வாரங்களுக்கு முடக்க அறிவுறுத்தல்!

தற்போதைய கொரோனா தொற்று பரவலில் இருந்து நாட்டை காப்பாற்ற அரசாங்கம் குறைந்தது இரு வாரங்களுக்கு நாட்டை மூட வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா விரிவாக்கத்தின் போது கடந்த காலத்தில் செய்ய வேண்டியவற்றில் பெரும்பாலானவற்றை அரசாங்கம் செய்ய தவறியதால் நாடு இன்று மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதன் தலைவர் டாக்டர் ருக்ஷன் பெல்லன தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இருந்தே இது தொடர்பாக தனது சங்கம் எச்சரிக்கைகளை விடுத்திருந்தாலும், அதை புறக்கணிக்கும் தற்போதைய சூழ்நிலையில் நாடு விழுந்துவிட்டது என்று தெரிவித்தார்.


நாட்டை மூடுவது பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிவித்த அவர், ஆனால் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு நாடு மூடப்படாவிட்டால், பொருளாதார சேதத்தினை விட மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.