பால்மா விலை அதிகரிக்கப்படுகின்றதா? - இராஜாங்க அமைச்சர்

பால்மா விலை அதிகரிக்கப்படுகின்றதா? - இராஜாங்க அமைச்சர்

நாட்டில் பால் மாவுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என்று கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு மற்றும் பால் மற்றும் முட்டைத் தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

கால்நடை பால் உற்பத்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாட்டின் பால் தேவையில் 40 சதவிகிதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், தேவையான அளவு பால் தற்போது கிடைக்கிறது என்றும் திரவப் பாலை மக்களுக்கு பிரபலப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமோ எதிர்பார்ப்போ இல்லை என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.