யூடியூப் இல் பாடலினை வெளியிட்ட நபர்கள் கைது!!
advertise here on top
advertise here on top
happy kids fun world

யூடியூப் இல் பாடலினை வெளியிட்ட நபர்கள் கைது!!

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு 'ரஸ்தியாது பதனம' எனப்படும் ஒரு குழுவினரால் இணையத்திற்கு வெளியிடப்பட்ட உள்ளூர் “ராப்” பாடலை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொரோனா பரவலை தொடர்ந்த சிறுவர்கள் இணையத்தளத்தில் கல்வி கற்கும் இக்கால கட்டத்தில், ஆபாச வார்த்தைகள், போதைப்பொருட்கள் மற்றும் மோசமான எடுத்துக்காட்டுகளுக்கு ஆளாகிறார்கள் என்று பெற்றோர்கள் பொலிஸிக் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த பாடலை தயார் செய்த சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு குற்றப் பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அங்கு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதோடு மற்றும் சில மணிநேரங்களுக்குள் வீடியோவை இணையத்திலிருந்து அகற்ற அலுத்கடை நீதிமன்றம் உத்தரவிட்டது.

நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெசல்வத்தே தினுகவினால் பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் குழுவுக்கு பாடலுக்காக நிதியளிக்கப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.