கொரோனா தீவிரமடைந்து விட்டது - அவரவர் அவர்களை பாதுகாத்துக் கொள்ளவும் - அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே!

கொரோனா தீவிரமடைந்து விட்டது - அவரவர் அவர்களை பாதுகாத்துக் கொள்ளவும் - அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே!

கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 48% அதிகரித்துள்ளது மற்றும் இந்த மாதம் மிகவும் ஆபத்தானது என்று இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இன்று கொரோனா தொற்றாளர்களின எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது என்று கூறிய அமைச்சர், அவசர தேவைக்காக இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொண்டார்.

கொரோனா பரவுவதைத் தடுப்பதே கொரோனாவுக்கு ஒரே தீர்வு என்று கூறிய அவர், அரசாங்கம் அல்லது வேறு யாராவது சட்டம் இயற்றும் வரை காத்திருக்கக் வேண்டாம் என்றும் கூறினார்.

அவரவருக்கு தனது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது என்றும் மேலும் தேவையற்ற பயணங்களை நிறுத்துமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.