கொரோனா மரண விகிதம் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சுகாதார மேம்பாட்டு பணியகம்!

கொரோனா மரண விகிதம் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சுகாதார மேம்பாட்டு பணியகம்!

இலங்கையில் தற்போது அதிக கொரோனா இறப்பு விகிதம் இருந்தாலும், இறப்பு விகிதம் அறிக்கையிடப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையினாலே தீர்மானிக்கப்படுகிறது, நாட்டில் பதிவாகும் உண்மையான தொற்றாளர்களின் எண்ணிக்கையை அறிவிக்குமிடத்து இறப்பு விகிதம் மேலும் குறைவடையும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது

கொரோனா தொற்றுகள் குறித்த தரவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டது தொடர்பில் அமைச்சகம் கவனித்து வருவதாக அதன் இயக்குனர், டாக்டர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

குறித்த தவறு சரி செய்யப்பட்டவுடன் கொரோனா இறப்பு விகிதம் விரைவில் குறைக்கப்படும் என்று அவர் கூறினார்.

தரவு பதிவு செய்வதில் தான் அதவறு ஏற்பட்டடே தவிற தரவுகளை மறைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மாவட்ட மற்றும் மாகாண மட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை சரிசெய்து வருவதாகவும், நிலைமையை சரிசெய்ய அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.