விபத்தொன்றில் இருந்து மயிரிழையில் தப்பிய அமைச்சர் பந்துல!

விபத்தொன்றில் இருந்து மயிரிழையில் தப்பிய அமைச்சர் பந்துல!

மேலிருந்து கீழே விழுந்த கருங்கல் விபத்தில் இருந்து மயிரிழையில் அமைச்சர் பந்துல குணவர்தன தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் களுத்துறை புளத்சிங்கள பாஹியங்கள குகைக்குச் சென்றபோது இந்த ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டார்.

அவர் குகையின் வெளிப்புறத்திற்க வந்த சந்தர்ப்பத்தில் ​மேலிருந்து ஒரு கருப்பு கல் விழுந்தது.

பாதுகாப்பு அதிகாரிகள் விரைவாக அமைச்சரை குகைக்குள் அழைத்துச் சென்றனர்.

பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் இவ்வாறான பாறை விழுந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.