கொரோணா நோயும், மரணங்களும் சோதனையா? தண்டனையா? எப்படி விமோசனம் பெறலாம்?

கொரோணா நோயும், மரணங்களும் சோதனையா? தண்டனையா? எப்படி விமோசனம் பெறலாம்?

உலகில் 180 மில்லியன் / 1.8 பில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இது உலக முழு சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும். இது போன்ற அடர்த்தியான சமூகத்தை சில நாடுகள் பகடைக் காயாக்கி நகர்த்த முயற்சிக்கின்றன.

இதற்குத் தீனி போடுவது போல் 1% முஸ்லீம்கள் சமூக வளைத்தளங்களில் பதிவுகளை இடுவதும் , நடந்துகொள்வதை சாதகமாக நாச கார சக்திகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன.

மீடியாக்களில் காட்டப்பட்ட நேர்காணல்களுக்கு , சமூக வளைத்தளங்களில் பதிலடி கொடுக்க முயற்சித்து வீணாக பாதையில் கண்ட பாம்பைத் தூக்கி சாரத்திற்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கின்றனர்

நோட்டுக்கள் பெறுமதி அதிகம் ஆனால் சத்தமில்லை, நாணயங்கள் பெறுமதி குறைவு சத்தம் அதிகம் என்பது போல இந்த 1% சத வீத அற்பர்களின் செயற்பாடு ஒரு சமுதாயத்திற்கே களங்கம் விளைவிக்கின்றது.

இதோடு சேர்ந்து வந்த கொரோணாவும் மரத்தால் விழுந்தவரை மாடு குத்திய கதையானது.

கொரோணா பாதுகாப்பிற்கான அனைத்து சுகாதார வழிமுறைகளை பேணி நடப்போம். துஆக்களிலும் வணக்க வழிபாடுகளிலும் அதிகமாக ஈடுபடுவோம். எந்த நேரத்திலும் மரணம் வீட்டுக் கதவைத் தட்டலாம். இதன் விளைவுகளையும் விபரீதங்களையும் உணர்ந்து நடப்போம்.

இன்று ஒரே குடும்பத்தில் 2 கிழமைக்குள் 3 தலை முறையினரின் இழப்பு மிகவும் கவலையளிக்கின்றது. ஒரு ஸாலிஹான பல மார்க்க விடயங்களிக்கு வாரிக் கொடுத்த பெண்மணி (இவர் சாதாரண மரணம்) இவரின் மகள் , பேத்தி (கொரோணா மரணங்கள்)அல்லாஹ் அவர்களை பொருத்தி ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக. குடும்பத்தாருக்கு மன அமைதியை வழங்குவானாக.

சில வாலிபர்கள் ஆரோக்கியமானவர்கள் , நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்கள் என வீராப்பு பேசி சுற்றித் திரிகிறார்கள் ஆனால் கடந்த வாரங்களில் பல பலசாலியான இளைஞர்கள் இறந்ததை நினைவு கூர்வோம். அல்லது சில வேளை வீட்டில் உள்ள முதியோர்கள் அல்லது சிறு பிள்ளைகள் இதன் விளைவுகளை அநுபவிக்க நேரிடலாம்.

இன்று வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. ஏழை, பணக்காரன், வலியவன் , பலவீனன் அனைவரையும் ஒரே வகையில் அச்சுறத்திக் கொண்டிறுக்கிறது.கொரோணாவினால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலும் , பின்னடைவும் இன்னொரு புறம் எல்லோரையும் வாட்டி வதைக்கின்றது.

யாரும் என்னைப்போல் சோதிக்கப்படவில்லை என்று சொல்லாத அளவிற்கு அத்தனை சோதனைகளையும் அனுபவித்தவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.

இந்த சோதனைகளில் இருந்து விடுபட ஒரே வழி, இறைவனிடம் கை ஏந்துவது தான். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“உண்மை நம்பிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே நம்பி இருப்பார்கள்”. (29:59)

சோதனைகள் இருவகைப்படும். தனிப்பட்ட சோதனைகள், ஒட்டுமொத்த சோதனைகள். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் சோதனைகள் ஒரு வகை. ஒரு இனத்திற்கு, ஒரு நாட்டிற்கு ஏற்படுவது ஒட்டு மொத்த சோதனை ஆகும்.

இப்போது நாம் இரண்டாம் வகை சோதனையை அநுபவித்துக்கொண்டிரக்கிறோம்

லவ்ஹுல் மஹ்ஃபூல்” என்ற ஏட்டில் எழுதப்பட்ட விதியையே மாற்றி விடும் சக்தி பிரார்த்தனைகளுக்கு இருக்கிறது என்ற அண்ணலாரின் பொன்மொழி ஒன்றிருக்கிறது.

சோதனைகளில் பொறுமை காப்பதென்பது சோதனைகள் மற்றும் சிக்கல்களுக்கு தம்மைத்தாமே ஆளாக்கிக் கொள்வதையோ, அதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொல்லாமல் இருப்பதையோ குறிக்காது. சிக்கல்கள் வரும் என்ற நிலை இருக்கும் போது முடியுமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதோடு, அது ஏற்பட்டு விட்ட நிலையில் அதிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கான இஸ்லாம் கூறும் முறையான அணுகுமுறைகளை கையாள்வதும் அவசியமாகும்.

உதாரணமாக நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற்று ஆரோக்கியமாக வாழ முயற்சிக்க வேண்டும். அதனையும் மீறி நோய்கள் ஏற்பட்டு விட்டால் அதற்கு சிகிச்சைப் பெறுவதும் அதன் மூலம் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு அதற்கான நன்மைகளை இறைவனிடம் எதிர்பார்த்து நிற்பதும் அவசியமாகும்.

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 12:87

சோதனைகளின் மூலம்:

மறுமையின் பலன்கள்:

1- மரத்தின் காய்ந்த இலைகள் உதிர்வது போல பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

2-உண்மையான இறை விசுவாசி அடையாளம் காணப்படுகின்றான்

3-மனிதனின் பொறுமையின் ஆழம் வெளிப்படுகின்றது

4:சுவர்க்க தரங்கள், நிலைமைகள் உயர்த்தப் படுகின்றன

5-மனிதர்களை உணரச்செய்து சரியான பாதையின் பக்கம் மீட்டெடுத்தல்

இம்மையில் பயன்கள்

1-வீண் விரயங்களை தவிர்த்து வாழ்தல்

2-தற்பெறுமை, பொய், ஆடம்பரம்,வீண் விளையாட்டுக்களை விட்டும் மீட்சி பெறுதல்

3-ஏழை , இயலாதவர்களுக்கு உதவும் மணப்பாண்மை , பக்குவமடைதல்

4-குடும்பங்கள் , நட்பர்களுக்கிடையே இடையிலான பல வருட தகராறுகள் திறைவுறவறுமை

மனிதரில் ஒரு பாலாருக்கு நோய், பட்டினி, பயம், முரண்பாடுகள், பிரச்சினைகள், யுத்தங்கள், பதற்றம், அச்சம், இழப்புக்கள், சேதங்கள், உயிராபத்துக்கள், குறைபாடுகள், ஏமாற்றங்கள், நிராசைகள், அதிருப்தி நிலைகள், குடும்ப முரண்பாடுகள், தொழில் பிரச்சினைகள் போன்றனவற்றைக் கொண்டும் சோதிக்கின்றான். இது பற்றி இறைவன் அத்திருமறையில் குறிப்பிடும்போது,

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்புக்களாலும் சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!” (அல்குர்ஆன்: 2 – 155)

அத்தோடு அனைத்து சோதனைகளிலும் அழிவு மாத்திரமின்றி , இறைவன் ஆக்கத்தையும் வைத்தள்ளான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக இந்த கொரொணாவினால் எத்தனை விதமான தொழில் வாயப்புகள் உறுவாகின? கலைஞர்கள், கொடை வள்ளல்கள் உறுவாகினார்கள்?

எனது பார்வையில் ,கொரோணா நோயாளி ஊரெல்லாம் சுற்றித் திரிவது கொலை முயற்சி நோயில்லாத சுகதேகி வீணாக சுற்றித் திரிவது தற்கொலை முயற்சி

ஆகவே, இரு கரமேந்தி எதிர்பார்ப்புடன் இறைவனிடம் பிராரத்தித்து மண்டியிடுவோம்.

எதிர்பாராத வித்த்தில் வழிகள் திறக்கப்படும். இறைவன் இந்த சோதனையை நீக்கி இயல்பு நிலைக்கு அல்லது இருந்த நிலையை விட சிறந்த நிலையை அமைத்துத் தருவான்

மபாஸ் மஷ்ஹூர்- பேருவலை
Maffaz Mashoor
09/08/2021

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.