
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற வேண்டிய காலத்தை கடந்து தொற்று உக்கிர நிலையை அடைந்தவுடன் வைத்தியசாலைக்கு நோயாளர்கள் சேர்வதால் மரணங்களும், நெருக்கடியும் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இன்று கண்டி - ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது கொவிட் ஒழிப்பு படையணியை அமைச்சரவை நிர்வகிக்காமல், இராணுவம் நிர்வகிப்பதால் தான் தொற்று ஒழிப்பு செயற்பாடுகள் தோல்வியடைவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த குற்றச்சாட்டையும் இராணுவத் தளபதி முற்றாக நிராகரித்தார்.