கொரோனாவினால் இறந்த தன் உறவினரை காட்டுமாறு கோரி மருத்துவமனை ஊழியர்களுக்கு நபரொருவர் அச்சுறுத்தல்!

கொரோனாவினால் இறந்த தன் உறவினரை காட்டுமாறு கோரி மருத்துவமனை ஊழியர்களுக்கு நபரொருவர் அச்சுறுத்தல்!

கொரோனா தொற்று காரணமாக இறந்த உறவினரின் உடலை பார்க்க விரும்புவதாக கூறி மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்களை அச்சுறுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் களுத்துறை பொது மருத்துவமனை பிணவறை அருகே நடந்தது.

களுத்துறை பொது மருத்துவமனையில் பிரேத அறையில் ஏராளமான சடலங்கள் வைக்கப்பட்டிருந்ததுடன், குறித்த நபர் உறவினரின் சடலத்தை பார்க்க விரும்புவதாக கூறி, நீதித்துறை மருத்துவ அதிகாரி மற்றும் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.