நாட்டில் கொரோனா இறப்புக்கள் பலவற்றுக்கான காரணம் இது தான்!

நாட்டில் கொரோனா இறப்புக்கள் பலவற்றுக்கான காரணம் இது தான்!

நாட்டில் பெரும்பாலான கொரோனா இறப்புகள் கோவிட் நிமோனியாவுக்கு முன் ஏற்படும் நுரையீரல் சிக்கல் காரணமாக என்று தெரியவந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் இறந்த சுமார் 100 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நுரையீரல் மற்றும் உள் உறுப்புகளில் மாற்றங்கள் காணப்படுவதாகவும் தேசிய தொற்று நோய்களுக்கான தடயவியல் நிபுணர் டாக்டர் சன்ன பெரேரா தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை மரணங்களில் சுமார் 30 சதவிகிதம் கோவிட் நிமோனியாவால் ஏற்பட்டவை என்றும் நுரையீரலில் இரத்தக் கட்டிகளால் குறைவான இறப்புகளே நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட் வைரஸ் நுரையீரலின் சுவர்களைத் தாக்கி கோவிட் நிமோனியாவை ஏற்படுத்துகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய்களுக்கான தடயவியல் நிபுணர் டாக்டர் சன்னா பெரேரா மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.