மேலும் 10 நாட்களுக்காவது ஊரடங்கை நீடிக்கவும் - முன்னாள் தலைமை நிபுணர் மருத்துவர் நிஹால் அபேசிங்க
advertise here on top
advertise here on top

மேலும் 10 நாட்களுக்காவது ஊரடங்கை நீடிக்கவும் - முன்னாள் தலைமை நிபுணர் மருத்துவர் நிஹால் அபேசிங்க


நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் தலைமை நிபுணர் மருத்துவர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டும் தீர்வு அல்ல என்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தார்.

அதிக சதவிகிதம் தடுப்பூசி செலுத்துவதை விட 60 வயதுக்கு மேற்பட்ட குழுவிற்கு தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம் என்று மருத்துவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை தடுப்பூசி போடுவதன் மூலம் மட்டும் தடுக்க முடியாது என்றும் இந்த நிலையை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தேவை என்றும் மருத்துவர் தெரிவித்தார்.

தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் தலைமை நிபுணர் டாக்டர் நிஹால் அபேசிங்க மேலும் கூறியதாவது, இந்த நாட்டின் தொற்றுநோயியல் பிரிவில் 21 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொது ஊழியர் என்ற முறையில், பயண கட்டுப்பாட்டை குறைந்தது இன்னும் 10 நாட்களுக்கு நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.