மிகவும் மோசமடையும் ராகமை வைத்தியசாலை - குவியும் கொரோனா சடலங்கள்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

மிகவும் மோசமடையும் ராகமை வைத்தியசாலை - குவியும் கொரோனா சடலங்கள்!

ராகமை வைத்தியசாலை செயல் இழக்கும் நிலையை எட்டியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் லியனகே ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது வைத்தியசாலையில் 500 கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவர்களில் பலர் மெத்தைகளுடன் வைத்தியசாலை தாழ்வாரங்களில் காணப்படுகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றாமல் மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் வைத்திருக்கின்றனர் என சில நோயாளிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ராகம மருத்துவமனையின் கழிவறைகள் வசதிகள் மோசமானவையாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எங்களது மருத்துவமனையே ஒரேயொரு போதனா வைத்தியசாலை கடந்த ஒரு வருடமாக இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எங்கள் நான்கு விடுதிகளை கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஒதுக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். எங்கள் மருத்துவமனையின் 26 முதல் 30ம் விடுதிகளை நாங்கள் நாளாந்தம் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ளோம். நாங்கள் இவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அவர்கள் அனைவரையும் துரித அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றோம்இதன் பின்னர் சிறிதளவு அறிகுறிகளை வெளிப்படுத்தியவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடும் அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்களை கந்தானை மினுவாங்கொட பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கின்றோம் ஏனையவர்களை ஏழாம் விடுதியில் அனுமதித்து கட்டில்களின் அடிப்படையில் அவர்களை அங்கு அனுப்பிவைக்கின்றோம் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.