நாட்டில் கொரோனா நிலைமை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் கொரோனா நிலைமை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் இதுவரை 45831 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு இன்று வியாழக்கிழமை பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

அதன்படி, இதுவரை 10 வயதுக்கும் கீழ்ப்பட்ட 19688 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதோடு, 10 தொடக்கம் 18 வரையான சிறுவர்களில் 26143 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

18 வயதுக்கும் கீழ்ப்பட்ட 14 சிறுவர்கள் இதுவரை கொவிட் தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர். அதேபோல, கடந்த 10 நாட்களாக கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 9000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.