நாளை முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில்!!

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் பெற்றுக்கொள்ளக் கூடிய சேவையொன்று நாளை (03) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

தலைமை பதிவாளர் திணைக்களத்தினால் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசிகள் மற்றும் கணனி வழியாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள விண்ணப்பம் செய்ய முடியும்.

வீசா அல்லது மாஸ்டர் கார்ட்களை பயன்படுத்தி இதற்கான கட்டணங்களை செலுத்த முடியும். ஸ்பீட் போஸ்ட் அல்லது விரைவுத் தபாலிலோ அல்லது மிக அருகாமையில் இருக்கும் பிரதேச செயலகத்திலோ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் www.rgd.gov.lk என்ற இணைய தளத்திலும் 011 2889518 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.