ஹிஷலினி-189 எனும் அவசர சேவை இலக்கத்தை அறிமுகப்படுத்தவும்!

ஹிஷலினி-189 எனும் அவசர சேவை இலக்கத்தை அறிமுகப்படுத்தவும்!

வீட்டு பணியாளர்களை பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன்,  தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளித்தார்

இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும் வகையிலே​யே அந்த யோசனைகள் உள்ளன என, அவரது ஊடகப்பிரிவு அனுப்பிவைத்தள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பணியாளர்களுடைய குறைந்தபட்ச வயதை 18 ஆக ஆக்குதல்.
85,000 ஆகவுள்ள வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்தல்.
வீட்டுப் பணியாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி / ஊழியர் சேமலாப நிதியத்தை உருவாக்குதல்.
ஹிஷலினி -189 எனும் வீட்டுப் பணியாளர் அவசர சேவை இலக்கத்தினை அறிமுகப்படுத்தல்.

உள்ளிட்ட பரிந்துரைகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.