மருத்துவமனைகளில் தொற்றாளர்களை அனுமதிப்பதில் சிரமம் - ஒட்சிசன் பற்றாக்குறை!

மருத்துவமனைகளில் தொற்றாளர்களை அனுமதிப்பதில் சிரமம் - ஒட்சிசன் பற்றாக்குறை!

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான ஒட்சிசனை சீனாவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது.

கொரோனா தொற்றாளர்களுக்கு தேவையான தினசரி ஒட்சிசனின் அளவு 45,000 லீட்டரை தாண்டியுள்ளதால், சீனாவில் இருந்து ஒட்சிசனை பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு 120,000 லீட்டர் ஒட்சிசன் பெற்றுக்கொள்ளப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மேல் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் கொரோனா தொற்றாளர்களினால் நிரம்பி வழிகிறது என்றும் சில மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பது இடைநிறுத்த வேண்டியிருந்தது என்றும் சுகாதார அமைச்சு கூறுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.