காபூல் விமானத்தள தாக்குதல்; இதுவரை 73 பேர் பலி; ISIS-K பொறுப்பேற்பு!

காபூல் விமானத்தள தாக்குதல்; இதுவரை 73 பேர் பலி; ISIS-K பொறுப்பேற்பு!


ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் குறைந்தது 60 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க துருப்புக்களும் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர் என்று மருத்துவ ஆதாரங்கள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடந்த “சிக்கலான தாக்குதல்” பல அமெரிக்க மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

13 அமெரிக்க மரைன் பிரிவினர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

காபூலில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்தார். குண்டுவெடிப்பு தாக்குதல்கள் இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம், -ISKP (ISIS-K)- ISIS அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவு உரிமை கோரியுள்ளது.

“நாங்கள் உங்களை வேட்டையாடி விலை செலுத்தச் செய்வோம். எனது உத்தரவின் பேரில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் எங்கள் மக்களின் நலன்களை நான் பாதுகாப்பேன்“ என பைடன் சூளுரைத்தார்.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ஒரு குண்டுவெடிப்பு விமான நிலையத்தின் அபே கேட் அருகிலும் மற்றொன்று அருகிலுள்ள பரோன் ஹோட்டலுக்கு அருகிலும் நிகழ்ந்தது. குறைந்தது ஒரு குண்டுவெடிப்பு தற்கொலை தாக்குதல் என உறுதியாகியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த தாக்குதலை தலிபான்களும் கண்டித்துள்ளனர். அமெரிக்க கட்டுப்பாட்டு பகுதிக்குள் தாக்குதல் நடத்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இரண்டு குண்டுவெடிப்பை தொடர்ந்து, சற்று தாமதமாக பெரிய வெடியோசையால் காபூல் அதிர்ந்தது. எனினும், வெளியேறும் அமெரிக்கப் படைகள் வெடிமருந்துகளை வெடிக்க செய்ததால் அந்த சத்தம் எழுந்ததாக உறுதி செய்யப்பட்டது.

-தமிழ் பக்கம்

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.