ஆடி அமாவாசை வழிபாடு : பங்குகொண்ட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

ஆடி அமாவாசை வழிபாடு : பங்குகொண்ட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!

மட்டக்களப்பு மாமாங்கம் ஆலயத்தில் நேற்றைய தினம் ஆடி அமாவாசை வழிபாடுகளில் பெரும் திரளான பக்தர்கள் ஈடுபட்டிருந்தனர், இவ்வாறு கொவிட் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

நேற்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு வருவதாகவும் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாமாங்கம் ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்கள் கொவிட் சுகாதார வழிகாட்டல்கள் எதனையும் பின்பற்றவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் ஐந்து அரங்காவலர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து அரங்காவலர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் இவர்களுக்கு தலா 25000 ரூபா பிணை வழங்கப்பட்டுள்ளது.

அரங்காவலர்கள், பிரதம குருக்கள் உள்ளிட்ட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்களையும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.