நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீட்டரிலும் அதிக மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீட்டரிலும் அதிக மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்!


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் (08) 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூரியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், அடிக்கடி மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைதீவு மாவட்டத்தின் சில இடங்களிலும்,  மாலை அல்லது இரவு வேளைகளில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், தெற்கு, வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை வேகத்தில் காற்று வீசக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.